இரு தினங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மும்பை இல் 1000 + தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்தது. அதை தொடர்ந்து கிளம்பிய சர்ச்சைகளில் அரசியலே பிரதானமாக இருந்தது. எனக்கும் அந்த பணியாளர்களை நினைத்தால் மனசு ரொம்ப கஷ்டம் ஆகத்தான் இருக்கிறது. ஆனால் - இன்றைய உலக வர்த்தக சுழலில் இது தவிர்க்க முடியாத நடவடிக்கை என்பது பல வர்த்தக வல்லுனர்களின் கருத்து. தற்போதைக்கு ஜெட் நிறுவனம் அந்த அமர்த்தி உள்ளது நிச்சயம் மன நிம்மதியை தருகிறது. ஆனால் இது ஒரு முன்னுதாரம் ஆக ஆகிவிடுமோ என்ற கவலையும் தோன்றத்தான் செய்கிறது. வர்த்தக நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட இயலவில்லை என்றால் அவற்றின் நீண்ட வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும். அப்படி நடந்தால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்க நேரிடலாம்.
இது இவ்வாறு இருக்க, இன்று வெளியான செய்தி ஒன்று: சீனாவில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சுமார் 7000 பணியாளர்களை நீக்கி உள்ளது. நம்மூர் கம்யுனிஸ்டுகள் இதற்கு என்ன சொல்வார்கள்? சீனா செய்தால் அது சரி, இங்கே என்றால் போராட்டம் - என்னே ஒரு இரட்டை நிலையடா...நெஞ்சு பொறுக்குதில்லையே..
Saturday, October 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment